The only acupuncture clinic operating in major metropolitan cities like chennai bangalore hyderabad and madurai in India

Without medicine, Root cause cure for - Diabetes, Blood pressure, Thyroid, Obesity, Eye disorder, Infertily, Skin problems

முக்கியமான மூன்று

 

 

முதலில் நாக்கு.

உணவை நாம் சாப்பிட்டதுமே முதலில் நாக்கு தான் சுவை மூலமாக அதனை அறிந்துகொள்கிறது. சுவையை உணர்ந்த மறு நொடியே அதனை சக்தியாக மாற்றக்கூடிய திறமை நாக்கினைத்தவிர வேறெந்த உறுப்புக்கும் இல்லை. நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் பசியோடு சாப்பிடும் போது உணவு தொண்டையை தாண்டியிராத நிலையில் வெறும் நாக்கில் வைத்தவுடனேயே நமக்கு திருப்தியுணர்வு வந்துவிடும். இது நாக்கானது சுவையின் மூலம் உள்ளுறுப்புகளுக்கு சக்தி வழங்குவதால் தான். ஜீரணத்தின் முதல் மற்றும் முக்கிய வேலையை நாக்கு தான் செய்யும். நாக்கு மட்டும் தான் அந்த வேலையை செய்ய முடியும்.

 

இரண்டாவது பற்கள்.

நாம் உண்ட உணவை பல்லானது நன்கு அரைத்து துகள்களாக்குகிறது. பல் செய்யும் இந்த வேலையை நம் உடலில் வேறெந்த உறுப்பும் செய்வதில்லை. பல் மனிதனுக்கு இருக்கும் நோக்கமே உணவை நன்கு அரைப்பதற்க்குத்தான். ஜீரணத்தின் இரண்டாவது முக்கிய வேலையை பற்கள் செய்கின்றன.

 

மூன்றாவது உமிழ்நீர்.

நம் வாயில் சுரக்கும் உமிழ்நீரானது நம்மைப் பொறுத்தவரை ஒரு அமிர்தம் என்று தான் சொல்லவேண்டும். பற்களினால் அரைக்கப்பட்ட உணவை உமிழ்நீரானது தன்னுள் சேர்த்து கரைத்து, அதில் நீர்த்தன்மையை சேர்த்து மிகவும் எளிதாக உணவுக்குழாய் வழியாக உணவானது செல்ல உதவுகிறது. அது மட்டுமல்லாமல் நமது உடலின் தன்மைக்கேற்ற உணவாக அதை சமநிலைப்படுத்துகிறது. (10 பேர் ஒரு இடத்தில் அமர்ந்து இட்லி சாப்பிடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். 10 பேரின் உடல் தன்மையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.ஆனால் உணவு மட்டும் ஒரே மாதிரி உண்கின்றோம். ஆகவே நம் உடலின் தன்மைக்கு ஏற்ப உணவை சமன்படுத்துவது உமிழ்நீராகும்). ஆகவே உமிழ் நீரானது நமது ஜீரண வேலையின் மற்றொரு அதி முக்கிய பணியை கவனிக்கிறது.

எந்த ஒரு மனிதனுக்கு ஜீரணம் முறையாக நடந்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய சத்துப் பொருட்கள் கிடைத்து பின்னர் கழிவுகள் முறையாக வெளியேறி விட்டதோ அவனுக்கு நோய் என்ற ஒன்று கிடையாது. மனிதனுக்கு வரும் அனைத்து நோய்களுக்கும் மிக மிக அடிப்படையான காரணம் அவன் ஜீரணம் சரியாக நடைபெறாதது தான்.

ஜீரணம் என்ற செயல் நமக்குள் சிறப்பாக நடந்தால் தான் எல்லாம் சரியாக நடக்கும். ஜீரணம் சரியாக நடைபெறவேண்டுமானால் மேலே சொன்ன மூன்று முக்கிய நிலைகளில் உணவானது 100% ஈடுபட வேண்டும். அதாவது உணவை நாக்கின் மூலம் நன்கு சுவையறிந்து, பற்களால் அரைத்து, உமிழ்நீரில் கலந்து தொண்டையை தாண்டும் போது ஒரு கூழ் போன்ற நிலையில் செல்லும் வகையில் உண்ண வேண்டும்.

இவ்வாறு உண்ணப்படும் உணவு ஆரோக்கியத்தைத் தரும். இல்லையென்றால் உடலானது நோய்களைப் பெறும். உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து இது மட்டும் தான். நாம் ஆரோக்கியமாக வாழ மிகவும் எளிமையான வழியையே இறைவன் நமக்காக உருவாகியுள்ளான்.

உங்களுக்கு ஏதேனும் நோய் உள்ளதா? நீங்கள் எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதை நினைவு படுத்திப்பாருங்கள். ஆரோக்கியம் உங்களை அள்ளிக்கொள்ள காத்திருக்கிறது. . .

 

Artilce by: www.yogasamudram.in for ACUAROGYA