The only acupuncture clinic operating in major metropolitan cities like chennai bangalore hyderabad and madurai in India

Without medicine, Root cause cure for - Diabetes, Blood pressure, Thyroid, Obesity, Eye disorder, Infertily, Skin problems

மூச்சு தான் மனதின் ராஜா

 

 

ஒரு மனிதனுக்கு இறைவன் பெரும் நண்பனாகவும், பெரும் எதிரியாகவும் ஒன்றே ஒன்றைத்தான் படைத்திருக்கிறார். அது தான் நம் மனம். தன் மனதின் மீது எவன் ஒருவன் கட்டுப்பாடு வைத்திருக்கிறானோ அவனே வாழ்க்கையை வெற்றிகொள்கிறான். அக்கட்டுப்பாடு இழந்தவர்களின் வாழ்க்கை போராட்டம் நிரம்பியதாகத்தான் இருக்கும்.மனதை அடக்கலாம் என்று கிளம்பியவர்களெல்லாம் சந்தித்தது பெரும் தோல்வியைத்தான். மனம் என்பது சதா சர்வ காலமும் ஓய்வில்லாமல் துள்ளித் திரியும் ஒரு அடங்கா குதிரை. அது மனித இனத்தின் மாபெரும் சக்தி. அதை அடக்குவதை விட, அதன் லாவகம் புரிந்து அந்த பெரும் சக்தியை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதே புத்திசாலித்தனம். நம் வாழ்வின் பயணமும் அங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது.

மனம் என்னும் பெரும் ஆற்றலை நமக்குள் விதைத்து படைத்த இறைவன் அதைக் கையாளும் ஆற்றலையும் நமக்குள்ளேயே தான் வைத்திருக்கிறார். அது தான் நம் மூச்சு. ஆம் மூச்சு தான் மனதின் ராஜா. நம் மனதை நம்மால் சரிவர கையாள முடியாது. ஆனால் மூச்சை சிறப்பாக கையாளலாம். பிறகென்ன, மூச்சு மனதை தன் கட்டுப்பாட்டில் வைக்கும்.

மனம் மூச்சின் பிடியில். மூச்சு நம் பிடியில். ஆகவே மனமும் நம் பிடியில் தானே. மனம் மட்டுமல்ல, இந்த வாழ்க்கையே நம் பிடியில் என்று சொல்லலாம். நமது இந்திய யோக கலாச்சாரத்தின் அடிநாதமே மூச்சை திறன்பட கையாளும் வித்தை தான். மூச்சின் சூட்சும ரகசியங்களை தங்கள் ஞானத்தால் உணர்ந்து இவ்வுலகத்திற்கே பெரும் பொக்கிஷமாய் விட்டுச்சென்றிருக்கின்றனர் நம்முடைய குருமார்கள்.

யோகா என்றால் வெறும் ஆசனங்கள் செய்வது தான் என்று தான் இன்றைக்கு மாறிவிட்டது. ஆசனங்கள் செய்வதே மூச்சுப்பயிற்சியை சிரமமின்றி செய்யத்தான் என்பதை நாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். மிகவும் சக்தி வாய்ந்த மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் செய்ய உடலை தயார்படுத்தும் ஒரு படி தான் ஆசனங்கள் ஆகும்.

யோகா கற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் ஆசனங்களோடு நின்று விடாமல் அதற்க்கு அடுத்த நிலையில் உள்ள சக்திவாய்ந்த பிராணாயாம பயிற்சிகளை முறையாக பயின்று கொள்ளவேண்டும். மூச்சுப் பயிற்சிகளில்லாமல் வெறும் ஆசனங்கள் மட்டும் கற்றுக்கொள்வது சர்க்கஸ் போலத்தான். அதனால் கிடைக்கும் பலன்கள் சொற்பமே.

மூச்சு நம் வசப்பட்டால் தான் வாழ்க்கை நம் வசப்படும். ஒருவருக்கு ஆசனங்கள் தெரியாவிட்டால் கூட பரவாயில்லை. மூச்சுப் பயிற்சிகள் தெரிந்தாலே அது நம்மை அடுத்தடுத்த உயரங்களுக்கு இட்டுச்செல்லும். பல பழமை வாய்ந்த, சக்திமிக்க மூச்சுப் பயிற்சிகளை அனைவருக்கும் கற்றுத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் எங்களுக்கு. அனைவருக்கும் ஆனந்தம் வசப்படும்.

 

Artilce by: www.yogasamudram.in for ACUAROGYA