The only acupuncture clinic operating in major metropolitan cities like chennai bangalore hyderabad and madurai in India

Without medicine, Root cause cure for - Diabetes, Blood pressure, Thyroid, Obesity, Eye disorder, Infertily, Skin problems

தூக்கம் உங்கள் கண்களை தழுவ மறுக்கிறதா?

தூக்கமே வரமாட்டேங்கிறதே என்று புலம்புபவரா நீங்கள்?

அனைத்து உயிர்களுக்கும் உணவு, நீர், காற்று போல தூக்கமும் மிக மிக அவசியமான தேவையாகும் என்பது ஒன்றாம் வகுப்பு பாடம். இதில் எனக்கு தூக்கமே வரமாடேங்கிறதே என்று புலம்புபவர்களும் இருக்கிறார்கள். எப்போதும் தூங்கியே பொழுதைக்கழிக்கும் பாக்கியவான்களும் இருக்கிறார்கள்.

உங்களுக்கு தூக்கம் வரமால் இருக்க அதிக வாய்ப்பாக இருக்கும் காரணங்கள் சில,

மற்ற நேரங்களை விட தூங்கும்போது மூளைக்கு குறைவான ரத்தமே தேவைப்படும். அதாவது மூளைக்கு எந்த வேலையும் இருக்கக்கூடாது. தரவும் கூடாது. (மூளைக்கு அதிக ரத்தம் செல்லக்கூடாது என்பதற்குத் தான் தலையணை வைத்துப்படுப்பதே). எனவே தூங்க வேண்டிய சமயத்தில் கண்டதைப்பற்றி யோசித்துக்கொண்டு மூளைக்கு வேலை கொடுக்காமல் இதமான, அமைதியான மன நிலையில் இருப்பது தூக்கத்தை வரவேற்கும் ஒரு நல்ல வழிமுறையாகும்.

இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதும், சாப்பிடாமலே பசியோடு இருப்பதும், படுப்பதற்கு முன் பால், டீ குடிப்பதும், சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணமாகாமல் இருப்பதும் தூக்கம் வராமல் போவதற்க்கான வாய்ப்புகளாகும்.

பயம், கோபம், கவலை, பிறர் மீது அடங்காத ஆத்திரம் போன்ற உணர்வுகளும் கூட சிலரின் தூக்கத்தை நிரந்தரமாக கெடுக்கும் முக்கிய காரணங்களாகும்.

அதிகாலை சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்ற தீவிரமான எண்ணமும் சிலருக்கு தூக்கத்தை வரவழைக்காமல் தடுக்கும். அதிகாலை 4 மணிக்கு அலாரம் வைத்து விட்டு, 12 மணிக்கு ஒருமுறை, 2 மணிக்கு ஒருமுறை என இடையிடையில் எழுந்து மணி பார்க்கும் பலரின் பிரச்சினை இது தான்.

முக்கியமாக இன்றைக்கு டிவி சீரியல்களும், ஸ்மார்ட் போன்களும் பலரின் துக்க நேரத்தை தள்ளிப்போட்டு அதனை அவர்கள் வாழ்வியலாக மாற்றிக்கொண்டு செல்லும் தீவிர வில்லன்களாக உருவாகியிருக்கின்றது. இதன் விளைவுகள் உடனுக்குடன் தெரியாது என்றாலும் நீங்கள் சிக்கப்போவது உறுதி.

உடலில் வைட்டமின் “பி” குறைபாடு இருப்பதும் சிலரின் தூக்கமின்மை பிரச்சினைக்கு காரணமாக இருக்கின்றன.

மொத்தத்தில் தூக்கமின்மை என்பது முழுக்க முழுக்க மன ரீதியிலாக தீர்க்கப்படவேண்டிய ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.

முறையான மூச்சுப் பயிற்சிகளும், சில தியான முறைகளும் மற்றும் சில அற்புதமான ஆசனங்களும் தூக்கமின்மை பிரச்சினைக்கு மிக அற்புதமான தீர்வாக அமைய முடியும்.

Artilce by: www.yogasamudram.in for ACUAROGYA