The only acupuncture clinic operating in major metropolitan cities like chennai bangalore hyderabad and madurai in India

Without medicine, Root cause cure for - Diabetes, Blood pressure, Thyroid, Obesity, Eye disorder, Infertily, Skin problems

காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம்?

உனக்கு காய்ச்சலா? டாக்டரிடம் சென்றாயா? ஊசி போட்டுக்கொண்டாயா? மாத்திரை சாப்பிட்டாயா? இது தான் இன்றைக்கு அனைவரும் கடைபிடிக்கும் பொது வழக்கம்.

இயல்பான வெப்பத்தில் இருக்கும் நமது உடலானது திடீரென தனது வெப்ப ஆற்றலை அதிகரிக்கிறது. அதற்கு நிச்சயம் காரணம் இல்லாமல் இருக்கப்போவதில்லை. எந்தக் காரணமும் இல்லாமல் உடலானது ஒரு செயலை செய்யாது.

நீங்கள் நினைத்தபோதெல்லாம் சிறுநீர் கழிக்க முடியாது. தேங்கிய சிறுநீரானது அதன் வெளியேற்ற அளவை எட்டிய பின், சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். சிறுநீர் கழித்த பின் அவ்வுணர்வு போய்விடும். சிறுநீர் வெளியேற்றம் என்பது உடலின் ஒரு இயல்பான நிகழ்வாகும். அதன் நோக்கம் கழிவை வெளியேற்றி உடலுக்கு நன்மை செய்வதாகும். அது போலத்தான் காய்ச்சலும். உடலின் வெப்பம் அதிகரிக்க தேவை ஏற்படும் போது உடல் அதனைச் செய்கிறது. இன்று உலகம் முழுவதும் காய்ச்சலை ஒரு நோயாக நம்பும் அளவுக்கு விளம்பரப்படுத்திவிட்டார்கள்.

காய்ச்சல் என்பது ஒரு நோயே அல்ல. உடலுக்கு மிகவும் அவசியமான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஒரு செயல் தான் காய்ச்சல்.

நமது ரத்தத்தில் சேரும் கழிவுப் பொருட்களை நமது பிராண சக்தியானது வெளியேற்றுகின்ற நிகழ்வின் போதும், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் நோய்க்கிருமிகளோடு போராடும் போதும் நமக்கு காய்ச்சல் ஏற்படுகிறது.

அந்நேரத்தில் நாம் தெளிவான புரிதலோடு, ஓய்வை மட்டுமே மேற்கொண்டால் அது எந்த வகை காய்ச்சலாக இருந்தாலும் தானே அடங்கும். அது வரை தேவையானது ஓய்வு மட்டுமே. காய்ச்சலை விரட்ட மருந்துகள் சாப்பிடுவது என்பது நமக்கு நன்மை செய்ய வந்த ஒருவனை ஓட ஓட விரட்டுவதற்கு ஒப்பாகும்.
மருந்துகள் சாப்பிடாமல் காய்ச்சலை முழுமையாக அனுமதித்து நமது உடலை தூய்மையாக்கிக் கொள்வதே நமக்கு நன்மை தரும்.
 

காய்ச்சல் வரும்போது எவ்வித மருந்துகளின்றி தானே குணமடைய நாம் கடைபிடிக்க வேண்டியவை:

 

1. காய்ச்சலின் போது வெப்பம் மிக மிக அளவுக்கு அதிகமாக இருந்தால் மட்டும் நெற்றி, அக்குள், மற்றும் அடிவயிற்றில் ஈரத்துணியை சிறிது நேரம் வைத்து எடுக்கலாம்.

2. பசி உணர்வு அறவே இருக்காது. தாகம் மட்டும் அவ்வப்போது இருக்கும். அவசியமான தாகம் எடுக்கும் வரை ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்க வேண்டாம். உதடுகள் காயும் போது மட்டும் தண்ணீர் கொண்டு உதடுகளை நனைத்துக்கொண்டால் போதுமானது. அல்லது வாய் கொப்பளித்துக் கொள்ளலாம்.

3. முறையான தாகம் எடுத்தால் மட்டும் அளவான தண்ணீர் அருந்தவும். எந்தவித உணவோ, பால், டீ, ஹார்லிக்ஸ், பிரட் போன்றவைகள் நிச்சயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

4. பசி உணர்வு ஏற்படும் போது அரிசிக் கஞ்சியும், அடுத்த வேளையிலிருந்து மிதமான உணவும் எடுத்துக்கொள்ளலாம்.

5. உடல் உழைப்பு ஏதுமின்றி பூரணமான ஓய்வு முக்கியம்.

காய்ச்சல் என்ற ஒன்றை மட்டும் நாம் தெளிவாக புரிந்து கொண்டு அதற்கு முறையாக ஒத்துழைத்தோமானால் நமது வாழ்நாளில் நோய் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். காய்ச்சல் சமயத்தில் உடலே நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தனை வேலைகளையும் செய்து விடுகிறது. அதனை நாம் தடுக்கும் போதுதான் நமக்கு பிரச்சினை ஆரம்பமாகிறது.

உடல் உங்கள் நண்பன். உடலின் மொழியறிந்து ஆரோக்கியம் பெறுங்கள்.